மகாராஷ்டிராவில் முதல்வராக பட்னாவிஸ், துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா ரிட் மனு தாக்கல்

மும்பை: மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து சிவசேனா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 144 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் ஆதரவு உள்ள தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வராக பட்னாவிஸ், துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா ரிட் மனு மனு தொடர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக இன்று காலை தேவேந்திர பட்னவீஸ் முதல்வராகப் பதவியேற்றார். துணை முதல்வராக அஜீத் பவார் பதவியேற்றுள்ளார். இந்த திடீர் திருப்பத்தால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்த புதிய கூட்டணிக்கு கடும் எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. ஆளுநர் கோஷியாரி அனைத்து விதிகளையும் மீறி விட்டதாக சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேலும் கூட ஆளுநர் ரகசியமாக செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் ஆளுநர் பட்னவீஸுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், பட்னவீஸ் - அஜீத் பவாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தது தவறாகும். 144 எம்எல்ஏக்களின் ஆதரவைக் கொண்டுள்ள சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியையே ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: