பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் விண்ணில் செலுத்தும் தேதி மாற்றம்

சென்னை: இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவிற்கு சொந்தமான 13 ‘நானோ’ செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி47  ராக்கெட் வரும் 27ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள் என மொத்தம் 14 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை (எக்ஸ்.எல் வகை) வரும் 25ம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவுவதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. இதற்கான இறுதிகட்ட பணிகளை இஸ்ரோ விஞ்ஞனிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பி.எஸ்.எல்.வி -சி47 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் தேதியை இஸ்ரோ மாற்றி அறிவித்துள்ளது. அதன்படி, 25ம் தேதிக்கு பதில் 27ம் தேதி காலை 9.28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ளது. பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட்டானது பி.எஸ்.எல்.வி வகையில் 21வது ராக்கெட்டாகும். இதேபோல், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் 74வது ராக்கெட் ஆகும். ராக்கெட்டில் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான ‘கார்டோசாட்-3’ ஒரு மேம்படுத்தப்பட்ட செயற்கைகோள். இது புவி கண்காணிப்பு, தொலையுணர்வுக்காக பயன்படுத்தப்படும். இதேபோல் துல்லியமான படங்களை படம் பிடிக்கும். மேலும், ராக்கெட்டில் உள்ள 13 நானோ வகை செயற்கைகோள்கள் அமெரிக்காவை சேர்ந்தவகையாகும்.

Related Stories: