தினகரன் ஒரு அரசியல்வாதியே கிடையாது: மதுசூதனன் பேட்டி

சென்னை: தினகரன் ஒரு அரசியல்வாதியே கிடையாது என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்தார். உலக மீனவர் தினம் காசிமேடு கடற்கரையில்  நேற்று கொண்டாடப்பட்டது. இதில்  அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கலந்துகொண்டு,  கேக் வெட்டி மீனவர்களுக்கு வழங்கினார்.

Advertising
Advertising

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்களெல்லாம் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு அம்மாவால் வளர்க்கப்பட்டவர்கள். 15 லட்சம் தொண்டர்களைக் கொண்ட இந்த இயக்கத்தில் இன்று 2 கோடி தொண்டர்களை சேர்த்தது அம்மா. இன்று யார் யாரோடு சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.  நாங்கள் உறுதியாக தேர்தலில் வெற்றிபெறுவோம்.

தினகரன் ஓர் அரசியல்வாதியே கிடையாது. சொத்து பத்திரங்களை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து வங்கியில் கடன் வாங்கி அதை கட்டாதவர்தான் தினகரன். சசிகலா,  அம்மா வீட்டில் இருந்ததால் அங்கு வந்து ஒட்டிக் கொண்டார். உள்ளாட்சித் தேர்தல்களில் சட்டத்தை மாற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஏன் மற்ற கட்சிகள் அரசாளும்போது சட்டங்களை மாற்ற வில்லையா. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: