மாஞ்சா நூல் விற்றவர் உள்பட 4 பேருக்கு குண்டாஸ்

சென்னை: தடைசெய்யப்பட்ட மாஞ்சா நூல் விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய நபர் உட்பட 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை முழுவதும் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி விற்பனை செய்து வந்த பழைய வண்ணாரப்பேட்டை என்.என்.கார்டன் 9வது தெருவை சேர்ந்த ஞானசேகரன் (53), கஞ்சா வழக்கில் தொடர்புடைய ஓட்டேரி தாசமகான் அலெக்சாண்டர் தெருவை சேர்ந்த அஜீசுல்லா (24), வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெசன்ட்நகர் கக்கன் காலனியை ேசர்ந்த தரணி (29), கொலை வழக்கில் தொடர்புடைய வியாசர்பாடி பி.பி.ரோடு, கே.வி.கே.சாமி தெருவை சேர்ந்த குமார் (30) ஆகிய 4 பேரை போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது ெசய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>