ஏரியா கவுன்சிலர் எனக்கூறி கட்டுமான நிறுவனத்திடம் மாமூல் கேட்டு மிரட்டல்: ஆசாமியிடம் விசாரணை

சென்னை: தேனாம்ேபட்டை போயஸ் சாலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவர், கட்டுமான நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் சார்பில், போயஸ் சாலை 4வது தெருவில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி தேனாம்ேபட்டை வரதராஜபுரத்தை சேர்ந்த சாமிவேல் (49) என்பவர் கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு வந்து, ‘‘நான் இந்த ஏரியா கவுன்சிலர். என்னை பார்க்காமல் எப்படி கட்டிடம் கட்டலாம். எனக்கு பணம் தாராமல் கட்டுமன பணிகளை மேற்கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்,’’ என ரவிச்சந்திரனை மிரட்டியுள்ளார்.

அவர் பணம் தர மறுத்ததால், கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரவிச்சந்திரன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து சாமிவேலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>