மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை அமைச்சர் முன்னிலையில் கருணாஸ் எம்எல்ஏ புகார்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அமைச்சர் உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் எம்எல்ஏ கருணாஸ் பேசுகையில், ‘‘பரமக்குடியில் பள்ளி மாணவர்களை குறி வைத்து பட்டப்பகலில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது’’ என குற்றம் சாட்டினார். இதனால் மேடையில் இருந்த அமைச்சர், எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக ஆட்சியில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அதிமுக ஆதரவு எம்எல்ஏ பேசியிருப்பது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: