ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் இரு வழிச்சாலையை மூன்று வழி சாலையாக்கும் பணி மும்முரம்

வத்தலக்குண்டு : ஒரு கோடியே 30 இலட்சம் மதிப்பில் இருவழிச்சாலையை மூன்று வழிச்சாலையாக்கும் பணி மும்முரம் நடக்கிறது. அதை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார். வத்தலக்குண்டு மதுரைச் சாலையில் நூத்துலாபுரம் பிரிவு முதல் தீயணைப்பு நிலையம் வரை பல விபத்துகள் நடந்த வண்ணம் இருந்தது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு அப்பகுதி சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று நீண்ட நாளாக கோரி வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத் துறையினர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவல் சரகம் மதுரைச்சாலையில் உள்ள நூத்துலாபுரம் பிரிவிலிருந்து தீயணைப்பு நிலையம் வரை ஒரு கி.மீ. தூரம் இரண்டு வழிச்சாலையாக இருந்த சாலையை இருபுறமும் தலா 6 அடி வீதம் அகலப்படுத்தி மூன்று வழிச்சாலையாக மாற்றும் பணி ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணியை தரக்கட்டுப்பாட்டு கோட்டப் பொறியாளர் சமுத்திரக்கனி ஆய்வு செய்தார். அப்போது உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: