விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது

லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கை ஸ்வீடன் அரசு கைவிட்டது. அமெரிக்காவுக்கு எதிரான பல்வேறு ஆவணங்களை வெளியிட்ட அசாஞ் பிரிட்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். 2 மாதங்களுக்கு முன் அசாஞ்சை தூதரகத்தில் இருந்து ஈகுவடார் அரசு வெளியேற்றியது. தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அசாஞ்சை பிரிட்டன் கைது செய்து சிறையில் அடைத்தது. ஜாமின் நிபந்தனைகளை மீறியதற்காக ஜூலியன் அசாஞ்சுக்கு பிரிட்டன் நீதிமன்றம் 50 வார சிறை தண்டனை விதித்தது.

Advertising
Advertising

Related Stories: