பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீதான தேச துரோக வழக்கு: நவ. 28ல் தீர்ப்பளிக்கிறது இஸ்லாமாபாத் நீதிமன்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீதான தேச துரோக வழக்கில் நவ.28-ல் இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி பர்வேஷ் முஷாரஃப். இவர், பிரதமராக இருந்த நவாஷ் ஷெரீப்பின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு கடந்த 1999ல் ஆட்சிக்கு வந்தார். கடந்த 2008 வரை அதிபராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் முந்தைய பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), முன்னாள் சர்வாதிகாரி முஷாரப் மீது கடந்த 2013ம் ஆண்டு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தது.

Advertising
Advertising

கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தானில் தவறான முறையில் அவசர நிலை பிரகடனம் செய்ததற்காக அப்போதைய அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப் மீது அந்நாட்டு அரசு தேசத் துரோக வழக்கு பதிவு செய்தது. அத்துடன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டது. இதன் மீதான வழக்கு நீதிபதி யவார் அலி தலைமையிலான 3 உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் நவ. 28ல் தீர்ப்பு வழங்க உள்ளதாக இஸ்லாமாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: