பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தடை போடுகிறது

நாகை: நாகை அருகே சிக்கலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி:  தமிழகம் முழுவதும் 4.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. அந்த நிலத்தை எல்லாம் பொன்.ராதாகிருஷ்ணன் மீட்டுக்கொடுக்க தயாராக உள்ளாரா?. பஞ்சமி நிலங்கள் குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க நான் தயாராக உள்ளேன்.  உள்ளாட்சி தேர்தல் இதுவரை நடைபெறாமல் இருக்க அதிமுக அரசு தான் காரணம். எதிர்க்கட்சியினர் தேர்தலை நடத்த வலியுறுத்தியும், அதிமுக அரசு தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போடுவதற்காக திட்டங்களை வகுத்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்த அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும்போது திடீரென மாவட்டங்களை அதிமுக அரசு பிரித்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளை எப்படி பிரிக்கப்போகிறது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>