சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் முகாம் அருகே திடீர் பனிச்சரிவு: மீட்பு பணிகள் தீவிரம்

ஸ்ரீநகர்: சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் முகாம் அருகே திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. காஷ்மீரின் சியாச்சின் பனிமலைப்பகுதி சுமார் 18,000 அடி உயரமானது. மேலும் உலகின் உயரமான போர்க்களம் என்று சியாச்சின் பகுதி வர்ணிக்கப்படுகிறது. இங்கு இங்கு வடக்கு பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கி முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ முகாம் ஒன்றில் இருந்த வீரர்கள் சிலர் மூடப்பட்டனர். 8 ராணுவ வீரர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக, ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்கும் பணிகள் விரைந்து நடைபெற்றுருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், க்ளாசியர் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: