உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக இன்று முதல் விருப்ப மனு வினியோகம்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்குகிறது. இதுகுறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2019 உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகிற அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 15ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியில் இருந்து அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வரும் 25ம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்குள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

கட்டணத் தொகையாக, மாநகராட்சி மேயர் 15,000, மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் 4,000, நகராட்சி மன்ற தலைவர் 7,000, நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 1,500, பேரூராட்சி மன்ற தலைவர் 4,000, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 1,000, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்வர்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: