இராண்டாவது நாளாக காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல்

காசா: பாலஸ்தீன தீவிரவாத குழுவின் படைத்தளபதி கொல்லப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இஸ்ரேல் படைகள் காசா பகுதியில் செவ்வாய்கிழமையன்று ஈரான் ஆதரவு- பாலஸ்தீன தீவிரவாத குழுவான இஸ்லாமிக் ஜிஹாத்தின் படைத் தளபதியான பஹா அபு அல் அட்டா கொல்லப்பட்டார். இந்த நிலையில் இரண்டாவது நாளாக காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லைப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இந்த தாக்குதலே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியானதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. முன்னதாக 1967 -ம் ஆண்டு நடந்த போரில் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதியை இஸ்ரேல் ராணுவம் கைபற்றியது குறிப்பிடத்தக்கது.

ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது. காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து பல மாதங்களாக போராடினர். இதில் ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>