பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  சென்னை  ஐ.ஐ.டி.யில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த முதுகலை மாணவி பாத்திமா லத்தீப், துறைத் தலைவர் சுதர்சன் பத்மநாபனின் மனரீதியான கடும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மதரீதியான பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு மிக மோசமாக நடத்தப்பட்டதால்தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பு எழுதி வைத்துள்ளது நெஞ்சை உலுக்குகிறது.

மாணவியின் பெற்றோர் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மறுத்து, பெற்றோரை மிரட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத மோசமான செயல்.  தமிழக காவல்துறை உடனடியாக  முழு விசாரணை நடத்தி, பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் இனிமேல் இதுபோன்ற மரணங்கள் தொடராத வண்ணம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: