பபுக்..ஃபனி.. வாயு.. கியார்..மகா..புல்புல்..புயல் உருவாவது 5 ஆண்டுகளில் 32% அதிகரிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

மும்பை : வங்கக்கடல் மற்றும் அரேபிக் கடலில் புயல் உருவாவது கடந்த 5 ஆண்டுகளில் 32% அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வங்கக்கடல் மற்றும் அரேபிக் கடலில் தீவிர புயல் உருவாவது 11% அதிகரித்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 32%ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவே இதற்கு முந்தைய பத்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஆண்டுக்கு ஒரு புயல்தான் வந்துள்ளது.

ஆனால், சமீப ஆண்டுகளில் மே, அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் அதிக புயல் தாக்கம் இருந்து வருகிறது என்று ஸ்கைமெட் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து உருவாகும் புயல்களால் பேரழிவுகள் ஏற்படுவதோடு, வானிலை மாற்றத்தையும் ஏற்படுத்துவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் புயல் உருவானது அதிகரித்ததற்கு புவி வெப்பமயமாதாலே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 -2019ம் ஆண்டுகளில் தலா 7 புயல்கள் உருவாகியுள்ளதாகவும் இது 1985ம் ஆண்டுக்கு பிறகான அதிக எண்ணிக்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை ஆறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. பபுக்,ஃபனி,வாயு,கியார்,மகா,புல்புல் ஆகிய 6 புயல்கள் இந்த ஆண்டு இந்தியாவை தாக்கியுள்ளன.

Related Stories: