வேலூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம் : 50 துப்புரவு பணியாளர்கள் பணிநீக்கம் ; வேலூர் ஆட்சியர் அதிரடி

வேலூர்: டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சரிவர செயல்படாத தற்காலிக துப்புரவு பணியாளர்கள் 50 பேரை பணிநீக்கம் செய்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்  உத்தரவிட்டுள்ளார். டெங்கு கொசு ஒழிப்பதற்காக 1,936 தற்காலிக துப்புரவு பணியாளர்களை ஒருமாத காலத்துக்கு மாவட்ட நிர்வாகம் நியமித்திருந்தது.

மக்களை அச்சுறுத்தும் டெங்கு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களில் காய்ச்சலால் பலியாகி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதுவரை 6 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் மட்டும் வேலூர் மாவட்டத்தில் 927 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். இவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த வீடு, வணிக வளாக உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும்  வருகிறது.

துப்புரவு பணியாளர்கள் பணிநீக்கம்

இந்த நிலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தற்காலிகமாக 1,936 துப்புரவு பணியாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு ஒழிக்கும் பணியில்  ஈடுபட்டனர். இதில் கொசு ஒழிப்பு பணியில் சரியாக பணி செய்யாமல், மெத்தமனாக பணியாற்றியதாக 50 தற்காலிக துப்புரவு பணியாளர்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: