திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். இதில் சாதாரண நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், பிரமோற்சவம் போன்ற முக்கிய உற்சவ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப பணம், தங்க நகை, வெள்ளி பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இதில் சாதாரண நாட்களில் ரூ2 கோடிக்கு மேலும், முக்கிய உற்சவ நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ₹3 கோடிக்கு மேலும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையாக கிடைத்து வருகிறது. இந்த காணிக்கைகள் தினந்தோறும் எண்ணப்பட்டு தேவஸ்தான வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை 84 ஆயிரத்து 351 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை முதல் வைகுண்டத்தில் உள்ள 22 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இலவச தரிசன பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரமும், சர்வ தரிசனம், திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Related Stories: