திருவனந்தபுரம்: கேரளாவில் போனில் இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வழக்கில் பிரபல மலையாள நடிகர் விநாயகனுக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமானவர் நடிகர் விநாயகன். இவர் ‘மாந்திரீகம்’ என்ற மலையாள சினிமா மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து சோட்டா மும்பை, கம்மட்டிபாடம், சிந்தாமணி கொல கேஸ் உள்பட ஏராளமான படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானார். இதேபோல் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து உள்ளார். சமீபத்தில் தொட்டப்பன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதே போல் தமிழில் திமிரு உள்பட சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு கேரள அரசு கடந்த 2016ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது வழங்கியது.