ரஜினிகாந்த் பாஜகவில் இணைவார் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை: பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் விளக்கம்

சென்னை: ரஜினிகாந்த் பாஜகவில் இணைவார் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் விளக்கமளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல, எனக்கும் பா.ஜ.க. சாயம் பூச முயற்சிகள் நடைபெறுகிறது நடிகர் ரஜினிகாந்த் குற்றம்சாட்டினார். இதில் நானும், திருவள்ளுவரும் சிக்க மாட்டோம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும், திருவள்ளுவர் போன்ற ஞானிகள் மதம், சாதிக்கு அப்பாற்பட்டவர் என்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தெரிவித்தார். திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியலாக்குவது தேவையற்றது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் பாஜகவில் இணைவார் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர், கடவுள் மறுப்பாளர் அல்ல. கடவுள் மறுப்பாளர்களும் திருவள்ளுவர் போதித்த வாழ்க்கை நெறிகளை போற்றுகின்றனர். திருக்குறள் தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியர்களுக்கு மட்டும் அல்ல உலக மக்களுக்கே பொதுவானது. மேலும், ரஜினி பாஜகவில் இணைவார் என ஒருபோதும் நாங்கள் கூறியதில்லை. தமிழக பாஜகவின் தற்போதைய இலக்கு உள்ளாட்சி தேர்தல். அதை எதிர்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டு வருகிறோம். பல்வேறு யூகங்கள் மீது பாஜக அக்கறை செலுத்தாது என்று கூறியுள்ளார்.

Related Stories: