வருசநாடு அருகே யானைகெஜம் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

வருஷநாடு: வருசநாடு அருகே யானைகெஜம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால்  சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே உப்புத்துறை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது யானைகெஜம் அருவி. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், இந்த அருவிக்கு தண்ணீர் வர துவங்கியுள்ளது. கனமழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் ஆண்டிபட்டி, தேனி, கம்பம் சின்னமனூர், உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு வர துவங்கியுள்ளனர்.

இப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருவிக்கு செல்லும் பயணிகள் பிளாஸ்டிக் பைகள் வைத்துள்ளார்களா என பரிசோதனை செய்த பிறகே அனுப்பப்பட்டு வருகின்றனர்.

வியாழன், வெள்ளி, சனி மூன்று தினங்களில் உப்புத்துறை மாளிகைப்பாறை கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த யானைகெஜம் அருவியில் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories: