டெல்லியில் காற்று மாசு, இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு: வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

குலுமணாலி: வடமாநிலங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களான அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடைக்கு பின் மீதமுள்ள பயிர்களின் அடிப்பகுதி, வேரை மறுமுறை எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அங்கு ஒவ்வொரு ஆண்டும் அறுவடை காலத்தின்போது, காற்று மாசு ஏற்படுகிறது. இப்படி எரிப்பதை தவிர்க்கும்படி பஞ்சாப், அரியானா மாநில அரசுகளை டெல்லி அரசு கேட்டுக்கொண்டது. ஆனாலும் அறுவடைக்குபின், காய்ந்த பயிர்களின் அடிப்பகுதியை எரிப்பது தொடர்ந்து வருகின்றன. இதனால் டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள

முகமூடி அணிந்தபடியே வெளியே வருகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகளும் முகமூடியுடனேயே காணப்படுகின்றனர்.

இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநிலம் குலுமணாலியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்கு வெப்பநிலை குறைந்து உறைநிலைக்கு சென்றுள்ளது. சாலைகளில் பனி படர்ந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதேபோல் ஸ்ரீநகரிலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. சாலைகளில் பனி படர்ந்துள்ளதால், பல சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், விமான சேவையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: