காற்று மாசு விவகாரம் மக்களின் வாழ்வா, சாவா பிரச்னை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்

புதுடெல்லி : டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுடன் விளையாடி வருகிறீர்கள். காற்று மாசு காரணமாக வாழ்வா, சாவா என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதை தடுக்க தவறியவர்கள் பொறுப்பாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபோன்று மக்கள் சாவதை நீங்கள் விரும்புகிறீர்களா? நாட்டை நூறாண்டுகளுக்கு பின்னோக்கி தள்ள விரும்புகிறீர்களா?

ஏன் அரசு அமைப்புகளால் பயிர்க்கழிவுகள் எரிப்பதை தடுக்க முடியவில்லை? மாநில அரசு மக்களை பற்றி அக்கறை கொள்ளவில்லை. அவர்கள் ஆட்சியில் இருக்க உரிமையில்லை. மாநில அரசுகள் மக்களின் நலன் முக்கியம் என்பதை மறந்து விட்டன. ஏழை மக்களை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. இது துரதிஷ்டவசமானது. ஏன் மாநில அரசுகள் பயிர்கழிவுகளை சேகரித்து அதை பாதுகாப்பான முறையில் அழிக்கக் கூடாது? மாசை கட்டுப்படுத்த வேண்டும். இது மக்களின் வாழ்வா, சாவா நிலையாகும். இதற்கு மாநில அரசுகளை பொறுப்பாக்க வேண்டும்’’   என்றனர்.

Related Stories: