தாய்லாந்தில் பயங்கரம்: பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு

பாங்காக்: தாய்லாந்தில் பிரிவினைவாத போராட்டக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து நாட்டில், மலேசியா எல்லைப் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் தன்னாட்சி வேண்டும் என அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சர்ச்சைக்குரிய அப்பகுதிகளில் தாய்லாந்து ராணுவமும், பொதுமக்களை பாதுகாக்கும் தன்னார்வலர்களும் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டிருப்பது வழக்கமாக நிகழ்ந்து வருகிறது. தாய்லாந்தின் தென் பகுதியில் உள்ள யாலா(Yala) மாகாணத்தில், தன்னார்வலர்கள் கவனித்து வரும் இரு வாகன சோதனை சாவடி வழியாக சில வாகனங்கள் செல்ல முயன்றுள்ளது.

இந்த வாகனங்களை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றபோது தகராறு ஏற்படவே, உதவிக்கு கிராம மக்கள் வந்துள்ளனர். இதில் வாக்குவாதம் முற்றியதும், வாகனங்களில் வந்தவர்கள் கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  4 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், தாக்குதலை பிரிவினைவாத போராட்டக்காரர்கள் நடத்தியிருக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: