இளம்பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர் கைது: அழகில் மயங்கி 5 கி.மீ. சென்றதாக வாக்குமூலம்

சென்னை: மடிப்பாக்கம் பகுதியை ேசர்ந்த இளம்பெண் ஒருவர் ேநற்று வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் இருந்து தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர், அந்த இளம்பெண்ணை தனது பைக்கில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இளம்பெண் தனது வீட்டி சென்று, மொபட்டை நிறுத்திவிட்டு முதல் தளத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதும் அந்த வாலிபர் இளம்பெண்ணை பின் தொடர்ந்து வீட்டின் முதல் மாடிக்கு சென்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், நீங்கள் யார்? எதற்கு என் பின்னால் வருகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர், நீங்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளீர்கள் என்று கூறி, ஒரு பார்சலை எடுத்து கொடுத்தார். அப்போது, அந்த இளம்பெண், நான் எந்த உணவையும் ஆர்டர் செய்யவில்லை, என்று கூறி, வெளியே செல்லுங்கள் என்று எச்சரித்துள்ளார். உடனே அந்த வாலிபர் உங்கள் வீட்டில் உணவு ஆர்டர் செய்து இருப்பார்கள், வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு, எங்கள் வீட்டில் யாரும் இல்லை. எல்லாம் வெளியே சென்று உள்ளார்கள், நீங்கள் வெளியே செல்லுங்கள் என்று கூறியபோது, அந்த வாலிபர் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு சாலையில் சென்ற பொதுமக்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த அந்த வாலிபர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் சம்பவம் குறித்து இளம்பெண் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, வேளச்சேரி நேரு நகர் திருவள்ளுவர் தெரு சேர்ந்த பிரசாந்த் (32) என்று தெரியவந்தது. இவர், பிரபல ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.அதைதொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்த பிரசாந்தை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் பிரசாந்த் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்  வருமாறு:‘நான் வேளச்சேரி வணிக வளாகம் அருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்த பெண் மிகவும் அழகாக இருந்ததால் என்னை கவர்ந்தார். நான் சற்று குடிபோதையில் இருந்ததால் உடனே இந்த பெண்ணை என்னுடைய பைக்கில் பின் தொடர்ந்தேன். ஒரு கட்டத்தில் என்னையே மறந்து அந்த பெண்ணிடம் பேச வேண்டும் என்று 5 கி.மீ. தொலைவுக்கு அவர் வீட்டிற்கே சென்றேன். அப்போதும் நான் எப்படியாவது பேச வேண்டும் என்ற நோக்கில் அவரிடம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளீர்கள் என்று கூறியபடி அந்த பெண்ணை நான் பார்த்தேன். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் போதையில் நான் ஏதாவது செய்துவிடுவேன் என்று கருதி சத்தம் போட்டார். உடனே நான் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன்.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories: