ஏசி லாரியில் அடைத்து வைத்து வந்த 40 அகதிகள்: கிரீசில் உயிருடன் மீட்பு

தெசாலோனிகி: ஏசி லாரியில் அடைத்து, சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்ட 41 அகதிகளை கிரீஸ் போலீசார் உயிருடன் மீட்டுள்ளனர்.உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார சீரழிவால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக நுழைய, கடல் வழியாகவும், சாலை மார்க்கமாகவும் கூட்டம் கூட்டமாக சட்டவிரோதமாக வருவது வாடிக்கையாக உள்ளது. அளவுக்கு அதிமான அகதிகளை ஏற்றி வரும் படகுகள், நடுக்கடலில் மூழ்கி பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.

தற்போது, குளிர்சாதன வசதி கொண்ட லாரிகளில் ஏராளமானோரை அடைத்து நாடு கடத்தும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் லண்டனில் பிடிபட்ட ஒரு ஏசி லாரியில் பாகிஸ்தானை சேர்ந்த 39 அகதிகள் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் உலகை உலுக்கியது. இதேபோல, இத்தாலி எல்லையில் 31 அகதிகள் ஏசி லாரியில் இருந்து மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், கிரீஸ் நாட்டின் ஷான்தி நகரில் குளிர்சாதன வசதி லாரிகளை போலீசார் நேற்று தீவிரமாக சோதனையிட்டு வந்தனர். அப்போது ஒரு லாரியில் 41 அகதிகள் அடைத்து அழைத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 7 பேருக்கு மட்டும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கிரீஸ் போலீசார் கூறி உள்ளனர். டிரைவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: