மாஜி டிஜிபி ஜாங்கிட் மீது வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 25 ஆயிரம் அபராதம் : ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  சென்னை புறநகர் முன்னாள் போலீஸ் கமிஷனராக பதவி வகித்தவர் ஜாங்கிட். டிஜிபி.யாகி ஓய்வு பெற்றார். இவர் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக சென்னையை சேர்ந்த வித்யா என்பவர் புகார் தெரிவித்து வந்தார். தொடர்ந்து பல்வேறு வழக்குகளையும் ஜாங்கிட்டுக்கு எதிராக தாக்கல் செய்தார்.இந்நிலையில், தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தனக்கு எதிராக வித்யா பேச தடை விதிக்க கோரியும், 1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட கோரியும்  ஜாங்கிட் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜாங்கிட் குறித்து பேச வித்யாவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருந்தபோது,  தனி நீதிபதி உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி வித்யா மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவில் திருத்தத்தையும் பெற்றார்.

இந்நிலையில், வித்யா தாக்கல் செய்த மேல்முறையீட்டு  மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வித்யா ஏற்கனவே தனி நீதிபதியின் உத்தரவில் திருத்தம் பெற்ற விவரம் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார், எனவே,  வித்யாவுக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்டுகிறது. இந்த தொகையை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு அவர் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: