கடந்த மாதம் பங்குச்சந்தையில் வெளிநாட்டவர் ரூ.16,464 கோடி முதலீடு

மும்பை: கடந்த மாதத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் ₹16,464 கோடி முதலீடு செய்துள்ளனர்.  இந்திய பங்குச்சந்தையில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளில் ₹12,475.7 கோடியும், கடன் பத்திரங்களில் ₹3,988.9 கோடியும் என மொத்தம் ₹16,464.6 கோடி முதலீடு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக செப்டம்பரில் ₹6,557.8 கோடி முதலீடு செய்திருந்தனர்.

 மத்திய அரசு பெரிய நிறுவனங்களுக்கான வரியை குறைத்தது, வங்கிகளுக்கு மறு மூலதனம் செய்ய முடிவு போன்றவை சந்தைக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன. இதுதவிர, தற்போதைய வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்களும் வெளியானது. இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்து அதிகம் முதலீடு செய்துள்ளனர். ஸ்திரமற்ற சூழ்நிலையால் அவ்வப்போது முதலீட்டை வெளியேற்றி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தொடர்ந்து 2வது மாதமாக பங்குச்சந்தையில் முதலீட்டை அதிகரித்துள்ளனர் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: