தேவகோட்டை குப்பை மேட்டால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்

தேவகோட்டை:தேவகோட்டை பழைய சருகணி ரோடு நகரின் தென் பக்கம் கடைசி பகுதியாகும். அங்கு கிருஷ்ணராஜபுரம் வீதியின் அருகில் சாலை ஓரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து காட்சி அளிக்கிறது. குப்பைகள் எடுப்பது பத்து தினங்களுக்கு ஒரு முறை அல்லது பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே எடுக்கின்றனர். விசாரித்ததில் அப்பகுதி மக்கள், எங்கள் ஏரியாவில் குப்பைகள் எடுக்க யாருமே வருவது கிடையாது. அதனால் நாங்கள் வீட்டில் உள்ள குப்பைகளை இரண்டு மூன்று நாள்கள் சேர்த்து வைத்து குப்பைகள் கவிந்துள்ள இடத்தில் வேறு வழியின்றி கொட்டிச் செல்கின்றோம். என்கின்றனர். குப்பைகள் எடுக்கப்படாத நிலையில் பன்றிகள் நாய்கள் மாடுகள் கூட்டமாக வந்து குப்பைகளை பரப்பி அந்த இடத்தை மேலும் நாசப்படுத்துகிறது.

சுகாதார சீர்கேட்டை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தினசரி குப்பைகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் சென்று துப்புரவுப்பணியாளர்கள் குப்பைகளை மக்களிடம் வாங்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து புரோட்டா கடை ஷேக் முகமது கூறுகையில், ‘குப்பைகள் கொட்டிக் கிடக்கும் இடம் முன்பு சுத்தமாக இருந்தது. இப்போது குப்பைகள் எடுக்கப்படாமல் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருக்கிறது. நாய்கள் சாலையில் செல்வோரை கடிக்கிறது. குப்பையைக் கடந்து செல்பவர்கள் பயந்தபடியே போக வேண்டியிருக்கிறது’ என்றார்.

Related Stories: