6 தொழிலாளர்கள் பலி எதிரொலி: காஷ்மீரில் வேலைபார்த்த 131 பேர் மேற்கு வங்கம் வந்தடைவார்கள்...மம்தா பானர்ஜி டுவிட்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலாளர்கள் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை அடுத்து, மீதமுள்ள தொழிலாளர்கள் மேற்கு வங்கத்திற்கே அழைத்து வரப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா  பானர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில், வெளிமாநிலத்தைச்சேர்ந்த டிரக் ஓட்டுநரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து வெளி மாநிலத்தவரை குறிவைத்து  பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது, அங்கு பணியாற்றும் வெளி மாநிலத்தவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு இதற்கிடையே, காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி மேற்கு வங்காள தொழிலாளர்கள் 5  பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும்,  மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பம் கேள்வி பட்டதும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தொழிலாலர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும்  செய்து தரப்படும் என்று தெரிவித்தார். மீதமுள்ள தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு அழைத்து வர மூத்த காவல் அதிகாரிகள் இருவரையும் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் வேலைபார்த்து வரும் 131 பேர் ஜம்மு - காஷ்மீர் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ரயில் மூலம் மேற்கு வங்கம் வந்தடைவார்கள் எனவும் மம்தா தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

Related Stories: