பேரணாம்பட்டு அருகே பாலூர் கிராமத்தில் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே உள்ளது பாலூர் கிராமம். இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள சேரன் தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. நாளடைவில் ஆழ்துளை கிணறு நீரின்றி வறண்டுவிட்டது.  ஆனால் பயனற்ற இந்த  ஆழ்துளை கிணறு மூடப்படவில்லை. இதனை அதிகாரிகள் தற்காலிகமாக மூடியுள்ளனர். இப்பகுதி வழியாக கனரக வாகனங்கள் அடிக்கடி செல்வதால் மீண்டும் ஆழ்துளை கிணறு மீது மூடப்பட்ட மூடிகள் உடையும் அபாயம் உள்ளது. எனவே ஆழ்துளை கிணறுகளை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் பாலூர் வனப்பகுதியையொட்டி உள்ள குட்டை அருகே 2 ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளது. இப்பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதி நீர்நிலைகள் உள்ளதால் விடுமுறை தினங்களில் குழந்தைகள் விளையாட செல்கின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இவற்றையும் அதிகாரிகள் பார்வையிட்டு அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: