ஜூன் மாதத்துக்கு பிறகு முதல் முறையாக சென்செக்ஸ் 40,000ஐ தாண்டியது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், முதல் முறையாக நேற்று 40,000 புள்ளிகளை தாண்டியது. இந்திய பங்குச்சந்தைகள் நேற்று முன்தினம் திடீர் ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 581.64 புள்ளிகள் உயர்ந்து 39,831.84 ஆக இருந்தது. இதனால் பங்குகள் மதிப்பு ஒரே நாளில் 2.73 லட்சம் கோடி உயர்ந்தது. நேற்று 2வது நாளாக பங்குச்சந்தைகள் ஏற்றம் அடைந்தன.

சென்செக்ஸ் 220 புள்ளி உயர்ந்து 40,052 புள்ளியை தொட்டது. அதாவது, கடந்த ஜூன் மாதம் 5ம் தேதிக்கு பிறகு சென்செக்ஸ் முதல் முறையாக 40,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 57 புள்ளிகள் உயர்ந்து 11,844ஆக இருந்தது. வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு, நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை அறிக்கைகள் போன்றவை முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதே இதற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Stories: