வருசநாடு அருகே காந்தி கிராமத்துக்கு தார்ச்சாலை அமைத்து தர கோரிக்கை

வருஷநாடு: வருசநாடு அருகே உள்ள காந்திகிராமத்துக்கு தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்டது காந்திகிராமம் மலைக்கிராமம். இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் விளைந்த விளை  பொருட்களை தேனி, ஆண்டிபட்டி, மதுரை, கம்பம், சின்னமனூர் ஆகிய பகுதிகளுக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இப்பகுதி மாணவ, மாணவிகள் அருகில் உள்ள தும்மக்குண்டு அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

ஆனால் தும்மக்குண்டு-காந்திகிராமம் இடையே இதுவரை தார்ச்சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. விவசாய விளைபொருட்கள் தலைச்சுமையாக எடுத்து செல்லப்படுகிறது. இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்க ேகாரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராமமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் இப்பகுதிமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: