உயிருக்கு போராடும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 8 வாரங்கள் ஜாமீன்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் 8 வாரங்கள் ஜாமீன் வழங்கியது. ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எனப்படும் ரத்தத் தட்டணுக்கள் குறைந்ததால், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், உயிருக்குப் போராடுவதாக அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார். ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நவாஸ் கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு  உடல்நிலை பாதிக்கப்படவே, மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். உடல்நிலையை சுட்டிக்காட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், நவாஸுக்கு ஜாமீன் அளித்தது. மருத்துவமனையில் நவாசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: