தொடர் குற்றச் செயலில் ஈடுபட்ட 21 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 21 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து  வருகின்றனர். அதன்படி போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய மண்ணடி ஐயப்பா செட்டி தெருவை சேர்ந்த  அஸ்கர் அலி (24), ராயபுரம் தொப்பை தெருவை சேர்ந்த முகமது ஹரிஸ் (39), கஞ்சா வழக்கில் தொடர்புடைய எண்ணூர் விம்கோ நகரை சேர்ந்த சின்னதுரை (51), பழைய வண்ணாரப்பேட்டை அவுசிங்போர்டு, பி- பிளாக் பகுதியை சேர்ந்த  நரேஷ்குமார் (22), கொலை வழக்கு மற்றும் கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில் வியாசார்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த நூர்தீன் (எ) ரபி (எ) இஸ்மாயில் (37).கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் திருவேற்காடு கஸ்தூரிபாய் அவென்யூ அழகர்சாமி நகர் பகுதியை சேர்ந்த ராம்பிரகாஷ் (23), வழிப்பறி மற்றும் வீடு புகுந்து திருடிய வழக்குகளில் திருநின்றவூர் ஏரிக்கரை எம்.ஜி.ஆர். சாலையை  சேர்ந்த ராஜா (எ) விக்னேஷ் (23), மூன்று கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய, ஏற்கனவே 7 முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட  வில்லிவாக்கம் சிட்கோநகர் பாலராம்புரம் பகுதியை சேர்ந்த கணேசன் (எ) ஜங்கிலி கணேசன் (34), திருமண மண்டபங்களில் குழந்தைகளின் தங்க நகைகளை திருடியது தொடர்பாக சுமார் 4 வழக்குகள் உள்ள கூடுவாஞ்சேரி, நந்திவரம்,  கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (48), கொலை வழக்கில் தொடர்புடைய கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த குகன் (32), அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (39) மற்றும் செந்தில் (எ) செந்தில்குமார் (எ) அறுப்பு செந்தில் (30).

அடிதடி வழக்கில் தொடர்புடைய அம்பத்தூர், சிவனந்தன் தெருவை சேர்ந்த முரளிதரன் (53), இரண்டு கொலை வழக்குகள் உட்பட வழிப்பறி வழக்குகள் உள்ள நிலையில் ஏற்கனவே 3 முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது  செய்யப்பட்ட கன்னிகாபுரம், தாஸ் நகரை சேர்ந்த தேவராஜ் (எ) கத்திக்குத்து தேவராஜ் (27), கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ்நகர் பகுதியை சேர்ந்த மிட்டாய் சுதாகர் (34), கொலை முயற்சி வழக்கு உட்பட  பல வழக்குகள் உள்ள தண்டையார்பேட்ைட நேதாஜி நகரை சேர்ந்த பிரிட்டோ டோனியல் (எ) டேனி (22), கொலை செய்த வழக்கில் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (எ) கட்டை பிரகாஷ் (23), வியாசர்பாடி எஸ்.எம்.நகர் பகுதியை சேர்ந்த  நவீன்குமார் (எ) வாழைப்பழ அப்பு (26), வியாசர்பாடி, ஜெ.ஜெ.ஆர் நகரை சேர்ந்த மேகா (எ) மேகநாதன் (32) மற்றும் அருண் (எ) அருண்குமார் (24). சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்திலும் வழக்குகள் உள்ள வியாசர்பாடி, அப்பு மேஸ்திரி  தெருவை சேர்ந்த அஜித் (எ) சப்ஜெயில் அஜித் (21) ஆகிய 21 பேர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: