விஐடி துணைத்தலைவர் பிறந்த நாள் விழா 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்குதல் திட்டம் தொடக்கம்: தொண்டு நிறுவனத்தை ஜி .வி.செல்வம் திறந்துவைத்தார்

வேலூர்: வேலூர் விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்தநாளையொட்டி 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்குதல்  திட்டத்தை தொடங்கி வைத்தார். முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விஐடி பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் தனது பிறந்த நாளை கொண்டாடினர். காலை 7 மணியளவில் காட்பாடி காந்தி நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து குடும்பத்துடன் வேலூர் தென்னமரத்தெருவில் உள்ள தங்களது பூர்வீக இல்லத்துக்கு சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தனது தாயார் ராஜேஸ்வரி அம்மாள் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்கிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்துக்கு குடும்பத்துடன் சென்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு திரண்டிருந்த பக்தர்களுக்கு ஜி.வி.செல்வம் மனைவி  அனுஷா செல்வம் பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து சிசுபவனில் உள்ளவர்களுக்கு காைல உணவு வழங்கினார். பின்னர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், செல்லியம்மன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வேந்தர் ஜி.விசுவநாதனை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அங்கிருந்து காந்தி நகரில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அங்கு அவருக்கு திமுக பொருளாளரும், காட்பாடி எம்எல்ஏவுமான துரைமுருகன், வேலூர் எம்பி கதிர்ஆனந்த், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, வேலூர் மாறன் அசோசியேட்ஸ் உரிமையாளரும், அன்பு உள்ளம் தொண்டு நிறுவன தலைவருமான வழக்கறிஞர் பி.டி.கே.மாறன், ஹோட்டல் கண்ணா பூமிநாதன், கே.எஸ்.சுந்தர், நாஸ்வா தலைவர் கணேஷ் ஏழுமலை, குணசேகரன், பொன்.குமார், எம்.முருகேசன் மற்றும் தொழிலதிபர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பூங்கொத்துகளை கொடுத்தும், சால்வைகள் அணிவித்தும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.  இதற்கிடையே பிறந்தநாளையொட்டி காட்பாடி அன்பு உள்ளம் தொண்டு நிறுவனம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் நடமாடும் வாகன சேவை திட்டத்தை விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து காட்பாடி காந்திநகரில் அன்பு உலகம் தொண்டு நிறுவனத்தை ஜி.வி.செல்வம் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்தில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக புளோரா, டெய்சி, தொண்டு நிறுவன தலைவர் பிடிகே மாறன், திட்ட மேலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: