மராட்டிய ஆளுநர் பாகத்சிங் கோஷ்யாரி உடன் சிவசேனா கட்சி நிர்வாகி திவாகர் ராவத் சந்திப்பு

மராட்டிய ஆளுநர் பாகத்சிங் கோஷ்யாரி உடன்  சிவசேனா கட்சி நிர்வாகி திவாகர் ராவத் சந்தித்து வருகிறார். மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை சிவசேனா கட்சி கேட்பதால் பா.ஜ.க ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க தங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி கொடுக்கவேண்டும் என்று கூட்டணி கட்சியான சிவசேனா பிடிவாதமாக இருப்பதால் பா.ஜ.க தலைமையிலான அரசு அமைவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ.க. சிவசேனா கூட்டணியை அரசு அமைந்துள்ளது. மொத்தம், 288 தொகுதிகள் உள்ள சட்டசபைக்கு, சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க.மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

அதேபோல், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் தனிப்பெரும் கட்சியாக சிவசேனா - பாஜ.க ஆட்சி அமைத்தது. தேர்தலுக்கு முன் பாஜ.க தலைவர் அமித்ஷா மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உடன் நடத்தப்பட்ட பேச்சில் விகிதாசாரம் குறித்து விவாதித்து அதை பாஜ.க நிறைவேற்ற வேண்டும் என்று சிவசேனா தலைவர் கூறியிருந்தார். இந்நிலையில் சுழற்சி முறையில் ஆட்சி விகிதாசாரத்தில் அமைச்சர் பதவியை தருவது குறித்து, பாஜ.க எழுத்து மூலமாக தெரிவிக்கவேண்டும், அதை உத்தவ் தாக்கரே வலியுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து முதல்வர் பதவியை விட்டுத் தர, பாஜ.க தயாராக இல்லை. ஆனால், சிவசேனா தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால், மாநிலத்தில் புதிய அரசு அமைவதில் இழுபறி நிலவுகிறது. மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் ஆளுநர் பாகத்சிங் கோஷ்யாரி உடன் சிவசேனா நிர்வாகி சந்திப்பால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை போலவே மராட்டிய ஆளுநருடன் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் சந்தித்து வருகிறார்.

Related Stories: