வெள்ளை மாளிகையில் பிரபல நாளிதழ்களை வாங்க டிரம்ப் தடை

வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ்கள் வாஷிங்டன் ேபாஸ்ட், நியூயார்க் டைம்ஸ். இவை, அதிபர் டொனால்ட் டிரம்ப், அவருடைய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து செய்தி வெளியிட்டு  வருகின்றன. இதனால், இவற்றின் மீது டிரம்ப் கடும் கோபத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில், இந்த பத்திரிகைகளை வாங்கக் கூடாது என வெள்ளை மாளிகைக்கும், அரசு அலுவலகங்களுக்கும் கடந்த திங்களன்று டிரம்ப் அதிரடி உத்தரவு  பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் அவர், ‘நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகள் போலி செய்தித்தாள்கள். இவற்றை இனி வெள்ளை மாளிகையில், அரசு அலுவலகங்களில்  வாங்கக் கூடாது.,’ என்று கூறியுள்ளார்.  இந்த  உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

Related Stories: