ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த 280 கோடி நிலம் மீட்பு: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: ஷெனாய் நகரில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த 280 கோடி மதிப்புடைய  4.3 ஏக்கர்  நிலம் மீட்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட அறிக்கை:  அண்ணாநகர் மண்டலம், ஷெனாய் நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 4.3 ஏக்கர் நிலம் திரு.வி.க. டாக்டர் மு.வ. கல்வி நிறுவனத்திற்கு 33 வருடத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.  குத்தகை காலம் முடிவுற்ற நிலையில்  சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் மேற்குறிப்பிட்ட 4.5 ஏக்கர்  நிலத்தை சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்குமாறு அறிவிப்பு வழங்கப்பட்டது. இக்கல்வி நிர்வாகம் சார்பில், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்குகளில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தற்போதைய சந்தை விலை சுமார் ₹280 கோடி மதிப்புடைய 4.3 ஏக்கர்  நிலத்தை சென்னை மாநகராட்சியின் வசம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: