மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி முதல் வழங்குவதாக அறிவித்த லட்டு பிரசாதம் ரத்து

மதுரை: மதுரை மீனாட்சி  அம்மன் கோயிலில் தீபாவளி முதல்  பக்தர்களுக்கு வழங்குவதாக அறிவித்த லட்டு பிரசாதம் திட்டம் திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு தீபாவளியில் இருந்து இலவச லட்டு விநியோகிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வந்தது.

இந்தநிலையில், மீனாட்சியம்மன் கோயில் இணை கமிஷனர் நடராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சுகாதாரமான முறையில் லட்டு   தயாரிப்பதற்கான நவீன இயந்திரம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சோதனை ஓட்டமும்,   உள்கட்டமைப்பு வசதிகளும் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும், தீபாவளிக்கு பிறகு ஒரு தேதியில் இலவச லட்டு பிரசாத   விநியோகம் தொடங்கப்பட உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

Related Stories: