இரும்பு ராடால் சரமாரி தாக்கி வாலிபரிடம் செல்போன் பறிப்பு: 3 பேருக்கு வலை

அம்பத்தூர்: முகப்பேர் ரெட்டிபாளையத்தில் வசிப்பவர் மணிபாலன் (26). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பிரபல ஸ்வீட் கடைக்கு இனிப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு மணிபாலன் வீட்டில் இருந்து வேலைக்கு  புறப்பட்டார். அம்பத்தூர் தொழிற்பேட்டை, வாவின் சந்திப்பு அருகே நடந்து வந்தபோது பைக்கில் வந்த 3 பேர் இவரை வழிமறித்து பாக்கெட்டில் இருந்த  செல்போனை கேட்டுள்ளனர். மணிபாலன் செல்போனை கொடுக்க மறுத்ததால் 3 பேரும் சேர்ந்து அவரை இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதில் மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு தப்பினர்.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். புகாரின்பேரில் அம்பத்தூர்  தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்த நபர்களை தேடி வருகின்றனர்.6 சவரன் திருட்டு: அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு கலைவாணன் நகரை சேர்ந்தவர் சிவகுமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மாரியம்மாள் (33). கடந்த 14ம் தேதி மாரியம்மாள் 6 சவரன் நகையை வீட்டு பீரோவில்  வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 20ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல மாரியம்மன் நகையை எடுக்க பீரோவை திறந்தபோது 6 சவரன் நகை மாயமானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் மாரியம்மாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: