திருவனந்தபுரம்: கேரளாவில் அரூர், மஞ்சேஸ்வரம், கோன்னி, எர்ணாகுளம், வட்டியூர்காவு ஆகிய 5 தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி இடைதேர்தல் நடந்தது. இதில் எர்ணாகுளம், அரூர், மஞ்சேஸ்வரம் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும், வட்டியூர்காவு, கோன்னி தொகுதிகளில் இடதுமுன்னணி வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். வட்டியூர்காவு தொகுதியில் இடதுமுன்னணி வேட்பாளர் பிரசாந்த் 14,465 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கோன்னி தொகுதியில் இடது முன்னணி வேட்பாளர் ஜனிஷ்குமார் 9934 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினோத் 3,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வினோத் (காங்) 37,891, மனுராய் (இமு) 34,141, ராஜகோபால் (பாஜ) 13,351 வாக்குகள் பெற்றனர்.