பேயை நிரூபித்தால் 50,000 சன்மானம் : ஒடிசாவில் கலெக்டர் அறிவிப்பு

பெர்காம்பூர்: `‘பேய் இருப்பதை நிரூபித்தால் 50,000 சன்மானம் வழங்கப்படும்’’ என்று ஒடிசா மாநிலத்தில் கலெக்டர் ஒருவர் அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநில மக்களிடையே பேய், பிசாசு, மாந்திரீகம் ஆகியவை குறித்த மூடநம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது. அண்மையில் அங்குள்ள கோபாபூர் கிராமத்தில் மாந்திரீக நம்பிக்கையை அவமதித்த ஆறு பேரின் பல்லை பிடுங்கி, மலத்தை உண்ண வைத்து கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

அதேபோல ெஜகன்னாத் பிரதா பகுதியிலும் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மக்களிடையே நிலவும் பேய், பிசாசு குறித்த மூட நம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, கஞ்ஜம் மாவட்ட ஆட்சியர் விஜய் அனிருத், ‘‘பேய் இருப்பதை நிரூபித்தால் 50,000 சன்மானம் வழங்கப்படும்’’ என்று அறிவித்துள்ளார்.

Related Stories: