வெளிநாட்டு முதலீடு,அன்னிய செலாவணி மோசடி குறித்து கல்கி சாமியாரை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு

டெல்லி: வெளிநாட்டு முதலீடு மற்றும் அன்னிய செலாவணி மோசடி குறித்து கல்கி சாமியாரை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா உள்பட கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் சிக்கின. பிரிட்டிஷ் விர்ஜினியா தீவுகள் உள்பட வெளிநாடுகளில் ரூபாய் 100 கோடிக்கு கல்கி சாமியார் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்துக்கு விரோதமாக கல்கி சாமியார் செய்துள்ள முதலீடு பற்றி விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. கல்கி ஆசிரமத்தில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 20 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணமும் சிக்கியது.சட்டவிரோதமாக கல்கி சாமியார் வைத்திருந்த வெளிநாட்டு  பணம் குறித்தும் விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

Related Stories: