நீட் தேர்வின் போது மாணவர்களின் கைரேகை, படிவங்களில் பெறப்பட்டதா அல்லது பயோமெட்ரிக் மூலம் பெறப்பட்டதா ? : தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவு

சென்னை : நீட் தேர்வின் போது மாணவர்களின் கைரேகை, படிவங்களில் பெறப்பட்டதா அல்லது பயோமெட்ரிக் மூலம் பெறப்பட்டதா என தேசிய தேர்வு முகமை, நாளை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிகர்நிலை பல்கலை கழகங்களில் மருத்துவ படிப்பு பயின்று வரும் மாணவர்களின் விண்ணப்பங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சிபிசிஐடி மற்றும் தடயவியல்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே வழக்கின் விசாரணையின் போது, தனியார் நீட் பயிற்சி மையங்கள் முறையாக அனுமதி பெற்று இயங்குகிறதா ? அரசு ஆசிரியர்கள் தனியார் நீட் பயிற்சி மையத்தில் வகுப்புகள் எடுக்கிறார்களா? தனியார் மையங்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Related Stories: