மக்களை மகிழ்விக்கும் வகையில் மெக்ஸிக்கோவில் 24-வது சர்வதேச கோமாளி மாநாடு: ஏராளமான மக்கள் கோமாளிகள் பங்கேற்பு

மெக்ஸிக்கோ: மெக்ஸிக்கோவில் நடைபெற்று வரும் 24-வது சர்வதேச கோமாளி மாநாட்டில் உலக முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் கோமாளி வேடமிட்டு கலந்து கொண்டனர். நகைச்சுவை திறனுடன் கோமாளி வேடமிட்டு மக்களை மகிழ்விக்கும் சிலர், அதன் மூலம் கிடைக்கும் சிறிய வருமானத்தை கொண்டு தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். மெக்ஸிக்கோவிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கோமாளி வேடமிட்டு,  மாயாஜால திறமையை பயன்படுத்தி குழந்தைகள், சிறுவர்கள், பெரியோர் என ஏராளமானோரை மகிழ்வித்து வருகின்றனர்.

இவர்களின் தொழிலை வளர்க்கவும், பிற நாட்டில் இத்தொழில் செய்வோருடன் அறிமுகம் ஏற்படுத்தி கொடுத்து தொழில் நுணுக்கங்களை கற்று கொள்ள ஏதுவாகவும் ஆண்டு தோறும் சர்வதேச கோமாளி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மெக்ஸிக்கோவில் நடைபெற்று வரும் மாநாட்டில் பங்கேற்க வந்த கோமாளிகள் தெருக்களில் நடமாடி மக்களை மகிழ்வித்தனர். இந்த கோமாளி மாநாட்டை பார்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டு வந்து ஆதரவு அளித்தனர்.

Related Stories: