காஷ்மீரின் சியாச்சின் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி

டெல்லி: கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. லடாக் பகுதியை யூனியன்  பிரதேசமாக அறிவித்தது. இந்த ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி அமலுக்கு வரவுள்ளது.

இதற்கிடையே, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது, பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் காஷ்மீர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அங்கு சுற்றுலா சென்ற பயணிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து காஷ்மீர்  அமைதி நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால், மத்திய அரசும் கட்டுபாடுகளை நீக்கி வருகின்றனர்.லடாக் பகுதியிலுள்ள சியாச்சின் பனிச்சிகரத்தை மக்கள் பார்வையிட ராணுவம் அனுமதியளிக்க போவதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், காஷ்மீரின் சியாச்சின் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

சியாச்சின் பனிச்சிகர பகுதி உலகிலேயே மிகவும் உயரமான போர் பதட்டம் நிலவும் பகுதியாகும். இந்தப் பகுதியில் கடும் குளிர் நிலவும். அத்துடன் பனி சரிவுகள் சர்வ சாதாரணமாக நிகழும். மேலும் இந்தப் பகுதி பாகிஸ்தான் நாட்டிற்கு அருகில்  உள்ளதால் ராணுவ வீரர்கள் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: