ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: சைக்கிளில் சென்று வாக்களித்தார் முதல்வர் லால் கட்டார்

கர்னல்: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில், கொட்டு மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர்.  காலை 10 மணி நிலவரப்படி, ஹரியானாவில் 8.92 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.  90 தொகுதிகளை கொண்டுள்ள ஹரியானா மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தலில்,  பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள், ஜனநாயக் ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியிருப்பதால், பலமுனை போட்டி உருவாகியிருக்கிறது.

இதற்கிடையே, ஹரியானா மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தலில் 2-வது முறையாக லால் கட்டார் போட்டியிடுகிறார். இதற்காக சண்டிகரில் இருந்து சீதார்த் எக்ஸ்பிரஸ் முலம் தனது சொந்த தொகுதியான கர்னல் வந்தார். இதனையடுத்து, தனது வீட்டில் இருந்து வாக்குப்பதிவு நடக்கும் மையத்திற்கு சைக்கிளில் சென்று வாக்களித்தார். அப்போது., செய்தியாளர்களிடம் பேட்டியளித்த  லால் கட்டார், வாக்களிக்க உரிமை உள்ளவர்கள் அதனை தவறாமல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories: