நகைகளை உருக்கி தந்த 2 பேர் மதுரையில் கைது

பெங்களூருவில் பல இடங்களில் கைவரிசை காட்டிய முருகன், அந்த நகை, பணத்தை தமிழகத்தில் பல இடங்களில் விற்பனை செய்ததாகவும், அவற்றை கைப்பற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மேலும் நடிகைகளுடன் தொடர்பு குறித்து விசாரிப்பதாகவும் கூறிய கர்நாடக போலீசார் முருகனை சென்னை அழைத்து வந்தனர். அதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி என்ற கிராமத்தில் உள்ள கணேசனின் வீட்டுக்கு சென்றனர். அங்கு கணேசனின் அண்ணன் கோபால் (30) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த உறவினர் கண்ணன் ஆகியோரை பெங்களூரு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இவர்கள் தான் முருகன் கொள்ளையடித்து கொடுத்த நகைகளை உருக்கி விற்று கொடுத்ததாக கர்நாடக போலீசார் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: