எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது : முதல்வர் எடப்பாடி மீண்டும் உறுதி

நெல்லை: ‘எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கப்பட்ட அதிமுகவை  யாராலும் அசைக்க முடியாது’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து முன்னீர்பள்ளம், கிருஷ்ணாபுரம், சீவலப்பேரி ஆகிய இடங்களில் வேனில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து பாளை கேடிசி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்றால்தான் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும். எங்கள் கட்சியை உடைக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தன. ஆனால் எதுவுமே நடக்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது.

Advertising
Advertising

நீட் தேர்வு குறித்து சிலர் குற்றசாட்டுகின்றனர். நாங்கள், நீட் தேர்வை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கடைசி வரை போராடினோம். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் மாநிலமாக திகழ்கிறது. மக்களுக்கு எதை செய்ய முடியுமோ அதைதான் நாங்கள் வாக்குறுதிகளாக கூறுகின்றோம். முடியாதை நாங்கள் ஒரு போதும் அறிவிப்பதில்லை. அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியை அரசு ஊழியர்களுக்கு வழங்குவதில் உறுதியாக உள்ளோம். அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசுக்கு இணையாக சலுகைகள் வழங்கி வருகிறோம். 6 மாதத்திற்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதற்கு இணையாக நாங்களும் அகவிலைப்படியை உயர்த்தினோம். இப்போதும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. தமிழக அரசும் அதை முன் தேதியிட்டு வழங்க உள்ளது. அரசும், அரசு ஊழியர்களும் இரு சக்கரங்கள் போன்றது. இந்த அரசை வழி நடத்துவதே அரசு ஊழியர்கள்தான். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: