வேலூர் மாவட்டத்தில் 800 பேர் பாதிப்பு டெங்குவுக்கு எல்கேஜி மாணவி பலி பள்ளிக்கு 1 லட்சம் அபராதம்

பள்ளிகொண்டா : வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 800க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகொண்டா அருகே டெங்குவுக்கு மாணவி உயிரிழந்தாள். அவள் படித்த பள்ளிக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு வேகமாக பரவி வருவதாகவும், இதை தடுக்க  போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் எல்கேஜி குழந்தை டெங்குவுக்கு பலியாகி உள்ளது. பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சரண்ராஜ். இவரது மனைவி மோனிகா ராணி. இவர்களது மகள் நட்சத்திரா(4). பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தாள்.  கடந்த 11ம் தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தாள். இதையடுத்து சிறுமி படித்த பள்ளிக்கு சுகாதாரத்துறை சார்பில் 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தற்போது 800க்கும் மேற்பட்டோரும், டெங்கு  காய்ச்சலிலும், ஆயிரத்துக்கும் ேமற்பட்டோர் மர்ம காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: